Saturday, October 9, 2010

மேன்மக்கள்

எனது  நெருங்கிய உறவினர் ஒருவர் அவரது துறையில் மெத்தப்படித்தவர். இருப்பினும் இன்றைய பொருளாதாரச்  சூழல்  காரணமாக, அனுபவம் குறைவால், அவர் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பது கடினமாக இருந்தது. இருப்பினும் அவர் நம்பிக்கை தளராமல் முயன்று கொண்டிருந்தார். தனது  துறையில் அதேனும் ஒரு வேலை கிடைத்தாலே போதும் என்ற முடிவிற்கும் வந்திருந்தார். 

இந்நிலையில் அவர் நண்பர் ஒருவர் இவரை தொடர்பு கொண்டு, குடும்ப சூழ்நிலை காரணமாக தான் செய்து வந்த வேலையை ராஜினாமா செய்ய வேண்டி வருவதால், அந்த வேலைக்கு என் உறவினரை சிபாரிசு செய்ய ஆசைப்படுவததாகக் கூறினார். அந்த நண்பர் செய்து வந்த வேலை, தனது துறையை சார்ந்தது தான் என்றாலும், என் உறவினர் படிப்பிற்கு ஒப்பிடுகையில் மிகவும் எளியதான ஒன்றாக இருந்தது. இருப்பினும் இன்றைய சுழலில் ஏதேனும் ஒரு வேலை கிடைத்து அதன் மூலம் கிடைக்கும் அன்பவம் என் உறவினருக்கு மிகவும் வேண்டிய ஒன்று. ஆனால் அவர் நண்பர் குறிப்பிட்ட குடும்ப சூழ்நிலை மிகவும் வருந்தத்தக்கதாகவும் இருந்தது. எனவே எனது உறவினருக்கு அவர் நண்பர் இப்படியோரு காரணத்தால் வேலையை விட நேர்ந்தது மிகவும் வருத்தம் அளித்தது.

ஒரு புறமோ தனக்கு இத்தனை நாட்களாக கிடைக்காமல் இருந்த "வேலை" என்ற ஒன்று கிடைக்க ஒரு வாய்ப்பு. மறு புறமோ தனது நண்பர் இப்படி ஒரு சுழலில் வேலையை விட நேர்ந்ததே என்ற ஒரு வருத்தம். இருப்பினும் தன்னைப்பற்றியும், தன் நிலை பற்றியும் சற்றும்  கவலைப்படாமல் என் உறவினர் தனது நண்பரிடம் கூறியது என்னை மிகவம் நெகிழ வைத்தது. தன நண்பரிடம், "நான் வேண்டுமானால் தற்காலிக பணியாளராக (temporary staff) உங்கள்  வேலையைச் செய்து வருகிறேன். நீங்கள் உங்கள் குடும்ப சுழல் சரியானதும் மீண்டும்  வேலையில் சேர்ந்து கொள்ளுங்களேன்" - என்று கூறினார். என்ன காரணமாகவோ அதை அவர் நண்பர் ஏற்கவில்லை. 

எனது உறவினர் நிலையில் நான் இருந்திருந்தால் இப்படி கூறியிருப்பேனா என்பது சந்தேகமே. என் உறவினர் அவர் நண்பரிடம் தொலைபேசியில் மேற்கூறிய வார்த்தைகளை சொல்லக்கேட்டு என் நிலை உணரவே எனக்குச் சற்று நேரமாகியது. பின்வரும் வார்த்தைகைள் ஏனோ என் நினைவிற்கு வந்தன. 

"அட்டாலும் பால் சுவையில் குன்றாது
 அளவளாய் நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர் -
 கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே 
 சங்கு சுட்டாலும் வெண்மை தரும்"

இறுதியாக ஓர் சிறு குறிப்பு - இந்த வலைப்பதிவில் நான் குறிப்பிடும்  எனது "நெருங்கிய  உறவினர்"  வேறு யாரும் இல்லை - எனது மனைவி தான் அவர். 

Wednesday, January 6, 2010

அவையத்து முந்தி இருப்பச்செயல்..

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.